குடும்பத்தை அசிங்கப்படுத்திய மனோகர், விஷயம் தெரிந்ததும் நிலா செய்த அதிரடி காரியம்... அய்யனார் துணை எபிசோட்

குடும்பத்தை அசிங்கப்படுத்திய மனோகர், விஷயம் தெரிந்ததும் நிலா செய்த அதிரடி காரியம்... அய்யனார் துணை எபிசோட்

அய்யனார் துணை

அய்யனார் துணை சீரியலில் யாரும் எதிர்ப்பார்க்காத நிலா-சோழன் திருமண கதைக்களம் கடந்த சில வாரங்களுக்கு முன் ஒளிபரப்பானது.

திருமணம் முடிந்ததும் நிலா அப்பா தனது குடும்பத்தினரை அழைக்கும் வகையில் ஒரு திருமண வரவேற்பு நடத்தலாம் என கூற முதலில் நிலா வேண்டாம் என கூறினார். ஆனால் அவரது அப்பா விடாமல் கேட்டதால் ஒப்புக்கொண்டார்.

முதலில் குடும்பத்துடன் வரவேற்பிற்கு புடவை எடுக்க குடும்பத்துடன் கடைக்கு சென்றனர். அங்கு வழக்கம் போல் மனோகர் மற்றும் தாஸ் சேரன், சோழன், பாண்டி, பல்லவன் என 4 பேரையும் ஸ்டேடஸ் வைத்து ஏதாவது சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

ஆனால் கடைசியில் சோழன் தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்தார். சாப்பிட வந்த இடத்திலும் இதேபோல் தான் நடந்தது.

எபிசோட்

இன்றைய எபிசோடில், சோழன் மேக்கப் செய்ய வெளியே செல்ல மனோகர் மற்ற 3 பேரையும் அழைத்துக்கொண்டு Store Roomல் தங்க வைக்கிறார். பல்லவன் என்ன இது என கேட்க சேரன் ஒரு நாள் தானே என்கிறார்.

சோழன் வீட்டிற்கு வந்ததும் மாடியில் படுத்துள்ள தனது அப்பாவை கீழே வந்து படுக்க கேட்கிறார், அவர் இங்கேயே வசதியாக உள்ளது என்கிறார். பின் கீழே வந்தவர் தனது அண்ணன்-தம்பிகள் படுத்துள்ள அறை கண்டு வருத்தம் அடைகிறார்.

இந்த விஷயம் நிலாவிற்கு தெரியவர தனது அப்பாவிடம் சண்டை போடுகிறார். அவர்களை ஏன் அங்கே தங்க வைத்தீர்கள், அவமானப்படுத்துகிறீர்களா, இதற்கு தான் ரிசப்ஷன் எல்லாம் வேண்டாம் என்றேன் என்கிறார்.

காலையில் முதல் ஆளாக அவர்களின் அறைக்கு சென்று காபி கூட கொடுக்கவில்லை என கோபப்பட்டு அவர்களுக்கு காபி போட்டுக் கொடுக்கிறார் நிலா.

தனது அம்மாவிடம் மாப்பிள்ளை வீடு என்று மரியாதை இல்லாமல் நீங்கள் செய்த விஷயத்தை சும்மா விட மாட்டேன், இருவரையும் நிற்க வைத்து கேள்வி கேட்டுவிட்டு தான் செல்வேன் என்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES