Colony: திரை விமர்சனம்

Colony: திரை விமர்சனம்

ட்ரெயின் டு பூஸன் புகழ் யென் சங் ஹோ இயக்கத்தில் வெளியாகியுள்ள Colony கொரிய திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

 

கதைக்களம்

தென் கொரியாவில் செயின்ஸ் பயோ என்ற நிறுவனம் உயிரி-பயங்கரவாதம் குறித்த கான்பரென்ஸை நடத்துகிறது. சி.இ.ஓ காங் வூ-சுல் விளக்கக்காட்சியை நடத்தும் அந்த கட்டிடத்திற்கு வேலை வாய்ப்பு தேடி, தனது முன்னாள் கணவர் ஹான் உடன் வருகிறார் க்வோன் சே-ஜியோங்.

கான்பரென்ஸ் முடிந்து ஒரு அறைக்கு செல்லும் சி.இ.ஓ காங் வூ-சுலை எதர்ச்சையாக க்வோன் பார்க்க, அதே அறைக்குள் பயோ விஞ்ஞானி சியோ யங் நுழைவதைப் பார்க்கிறார். அந்த அறையில் தனது ஆராய்ச்சியை நீங்கள் திருடி விட்டீர்கள் என்று வூ-சுலுடன் வாதிடுகிறார் யங்-சேயல். ஒரு கட்டத்தில் யங் தான் மறைத்து வைத்திருந்த ஊசியை வூ-சுல் மீது செலுத்துகிறார்.

Colony: திரை விமர்சனம் | Colony Movie Review

அதன் விளைவாக வூ-சுல் ஜோம்பியாக மாறி அருகில் உள்ள ஊழியர்களை தாக்க, அவர்களும் ஜோம்பியாக மாறுகிறார்கள். இதன் விஷயம் போலீசுக்கு தெரிய வர அந்த மொத்த கட்டிடமும் யாரும் வெளியேற முடியாதபடி முடக்கப்படுகிறது.

க்வோன் தனது முன்னாள் கணவருடனும், மாற்றுத்திறனாளி சகோதரியுடன் பாதுகாப்பு ஊழியரான சோய் ஹியூனும் என சிலர் ஒரு அறைக்குள் ஜோம்பிகளிடம் இருந்து தப்பிக்க புகுந்து பூட்டிக்கொள்கின்றனர். அதன் பின்னர் அவர்கள் எப்படி தப்பித்தார்கள்? கதாநாயகி நிலைமையை எப்படி கட்டுக்குள் கொண்டு வந்தார் என்பதே மீதிக்கதை.

Colony: திரை விமர்சனம் | Colony Movie Review

படம் பற்றிய அலசல்

2016யில் வெளியான ட்ரெயின் டு பூஸன் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கொரிய இயக்குநர் யென் சங் ஹோ, மீண்டும் வித்தியாசமான கதைக்களத்தில் ஒரு ஜோம்பி திரைப்படத்தை கொடுத்துள்ளார்.

ஜோம்பி படங்களுக்கே உரித்தான பாணி படம் ஆரம்பித்தாலும், வில்லன் செய்யும் சூழ்ச்சிகள், கதாநாயகி அமைக்கும் வியூகங்கள் என சுவாரஸ்யமான காட்சிகளில் கதை விறுவிறுப்பாக நகர்கிறது.

 

Colony: திரை விமர்சனம் | Colony Movie Review

 

உயிரை காப்பாற்றிக் கொள்ள போராடுபவர்களில் சுயநலமாக மற்றவரை பலி கொடுக்க முயல்பவர்கள், தன் உயிர் போனாலும் பிறரை காப்பாற்ற வேண்டும் என்று இறங்குபவர்கள், பழிவாங்க துடுக்கும் நபர் என மனிதர்களின் குணங்களை கதாபாத்திரங்கள் வழியாக நேர்த்தியாக காட்டியுள்ளார் இயக்குநர்.

ஜோம்பி படமாக இருந்தாலும் பரபரப்பான ஆக்ஷ்ன் த்ரில்லர் மோடிலேயே பயணிக்கும் திரைக்கதை, நம்மை சீட்டின் நுனியில் அமர வைக்கிறது. நடிகர்களை பொறுத்தவரை கதாநாயகி ஜுன் ஜி-ஹியுன் சென்டிமென்ட் காட்சிகளில் சோகத்தையும், சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷத்தையும் அழகாக வெளிப்படுத்துகிறார்.

 

Colony: திரை விமர்சனம் | Colony Movie Review

உயிரி விஞ்ஞானியாக வரும் கூ க்யோ-வான் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். எல்லோரும் பதற்றமாக ஓடும் சூழலில் க்யோ-வான் கூலாக நடந்து செல்வது ஸ்பைடர் பட எஸ்.ஜே.சூர்யாவை நினைவுபடுத்தும்.

பாதுகாப்பு காவலாளியாக ஜி சங் வூக் சகோதரிக்காக கத்தியுடன் களமிறங்கும் காட்சி மாஸ். அதேபோல் பிற கதாபாத்திரங்களும் தங்களது வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். காட்சிகளில் பல இடங்களை கூஸ்பம்ப் மொமெண்ட்ஸை இயக்குநர் வைத்துள்ளார்.

 

Colony: திரை விமர்சனம் | Colony Movie Review

குறிப்பாக கிளைமேக்ஸில் கண்டிப்பாக விசில் பறக்கும். டெக்னீக்கலாக படம் மிகவும் வலுவாக உள்ளது. பின்னணி, சவுண்டிங், எடிட்டிங் என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளன.

க்ளாப்ஸ்

திரைக்கதை

நடிகர்கள்

ட்விஸ்ட்

பல்ப்ஸ்

பெரிதாக ஒன்றுமில்லை

மொத்தத்தில் இந்த Colony வித்தியாசமான ஜோம்பி நகரம். ஜோம்பி படம் ரசிகர்கள் த்ரில்லான அனுபவத்தை பெற கண்டிப்பாக இந்த Colony-ஐ விசிட் அடிக்கலாம்.

Colony: திரை விமர்சனம் | Colony Movie Review

LATEST News

Trending News