மூன்று முடிச்சு சீரியலில் புதிதாக நடிக்க வந்துள்ள பிரபல நடிகை.. யார் தெரியுமா? இதோ பாருங்க
மூன்று முடிச்சு
சன் டிவியில் கடந்த 2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் மூன்று முடிச்சு. இந்த சீரியலில் ஸ்வாஸ்தி கொண்டே, நியாஸ் கான், ப்ரீத்தி சஞ்சீவ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
560+ எபிசோட்களை கடந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் TRP-யில் முதலிடத்தில் உள்ளது. அதுவும் ஓரிரு வாரங்களாக அல்ல, தொடர்ந்து பல மாதங்களாக முதலிடத்தில் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று முடிச்சு சீரியலில் தற்போது நந்தினி சிறையில் உள்ள நிலையில், அவரை நிரபராதி என நிரூபித்து வெளியே கொண்டு வர வேண்டும் என சூர்யா போராடிக்கொண்டிருக்கிறார்.

புதிய எண்ட்ரி
இந்த நிலையில், மூன்று முடிச்சு சீரியலில் புதிதாக நடிக்க வந்துள்ளார் நடிகை சஹானா. இவர் இந்த சீரியலில் சூர்யாவின் கம்பெனியில் புதிதாக CEO-வாக என்ட்ரி தந்துள்ளார்.

இவருடைய வருகை மூன்று முடிச்சு சீரியலில் என்னால் திருப்பங்களை கொண்டு வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.