Minions & Monsters திரை விமர்சனம்

Minions & Monsters திரை விமர்சனம்

உலகம் முழுவதும் அனிமேஷன் படங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது, அந்த வகையில் மினியன்ஸ் படங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்க பீட்டர் காபின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த மினியன்ஸ் அண்ட் மாஸ்டர்ஸ் படம் எப்படி? பார்ப்போம்.

 

கதைக்களம்

சினிமா சம்மந்தமான ஒரு பொருட்காட்சிக்கு குழந்தைகள், பெரியவர்கள் வர, அங்கு அந்த இடத்தை சுற்றி காட்டும் பெண், இந்த ஹாலிவுட்டின் மிகப்பெரிய மாற்றத்திற்கு காரணமே இந்த மினியன்ஸ் தான் என காட்டுகின்றனர், அந்த குழந்தைகள் எங்களுக்கு அப்படி தெரியவில்லை என சொல்ல மினியன்ஸ் கதையை அந்த பெண் சொல்ல ஆரம்பிக்கிறார்.

மினியன்ஸ் பல வருடம் முன்பு தங்களுக்கு ஒரு பிக்பாஸ் வேண்டும் என தேடி அலைய, அவர்கள் யாரை தேர்ந்தெடுத்தாலும் சில நாட்களிலேயே அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுகிறது அதுவும் மினியன்ஸால்.

அதற்கு முக்கிய காரணம் ஜேம்ஸ், ஹென்றி என்ற 2 மினியன்ஸ், அடுத்தடுத்த நாட்களில் ஏதாவது ஒரு மினியனால் அவர்களின் பிகாப்ஸ் இறக்க, அந்த நேரத்தில் ஒரு திருடனை தங்கள் பிக்பாஸ் என நினைத்து மினியன்ஸ் துரத்த, அவனோ ஹாலிவுட் வாசலில் வந்துடைகிறான்.

அந்த நேரத்தில் மினியன்ஸை வைத்து படம் எடுக்கலாம் என ஒரு இயக்குனர் நினைக்க, நினைத்தப்படி படம் எடுத்து பிளாக்பஸ்டர் ஆகிறது, ஆனால் வசனம் வைத்து வரும் படங்களில் மினியன்ஸால் பேச முடியாததால், அவர்களை ஹாலிவுட்டை விட்டு துரத்த, சினிமா ஆசை கொண்டு ஜேம்ஸ் மினியன் எப்படியாவது படம் எடுத்து ஆஸ்கர் வாங்க வேண்டும் என நினைக்க, பிறகு என்ன ஆனது என்பதன் கலகலப்பான காட்சிகளே இந்த மினியன்ஸ்.

படத்தை பற்றிய அலசல்

மினியன்ஸ் படம் என்றாலே நமக்கு FUN தானே முக்கியம், அவர்கள் பேசுவது கூட புரியாது ஆனாலும் நமக்கு மினியன்ஸ் செய்யும் சேட்டைகள் செம சிரிப்பை வரவைக்கும், அப்படி தான் இந்த மினியன்ஸ் & மான்ஸ்டரும்.

அதிலும் ஜேம்ஸ், ஹென்றி கதாபாத்திரம் எப்படி ஹாலிவுட்டை மாற்றினார்கள் என்பதை காட்டிய விதம் சூப்பர், அதோடு பல ஹாலிவுட் படங்கள் முக்கியமாக கல்ட் க்ளாசிக் படங்களை மினியன்ஸ் வைத்து காட்டிய காட்சி செம மெட்டபர் காமெடி.

ஒரு மான்ஸ்டரை வைத்து படம் எடுக்க வேண்டும் என ஜேம்ஸ் மினியன் நினைக்க, அதற்காக அவர்கள் போடும் ப்ளான், அதனால் ஏற்படும் பாதிப்பு என படம் முழுவதும் மினியன்ஸ் அட்டகாசம் செய்துள்ளனர்.

ஜேம்ஸ், ஹென்றி தவிற மற்ற மினியன்ஸ் பிக்பாஸ் தேடி அலைவது அதற்காக வரும் காட்சிகள் எல்லாம் சிரிப்பு சரவெடி, இப்படி படம் முழுவதும் குழந்தைகள் வயிறு குலுங்க சிரிக்கும் காட்சிகள் நிறைந்து உள்ளது.

அதே நேரத்தில் மினியன்ஸ் பற்றி எதும் தெரியாதவர்கள் இந்த படத்தை பார்த்தால், என்ன ஒன்னுமே புரியல என்ன பேசுறாங்க என கடுப்பாகவும் வாய்ப்புள்ளது, அதனால் மினியன்ஸ் பட விரும்பிகள் மட்டுமே பார்ப்பது நல்லது.

டெக்னிக்கலாக அனிமேஷன் காட்சிகள் சூப்பர் அதிலும், ஒரு ட்ரெயினில் மினியன்ஸ் திருடனை துரத்துவது, அதை தொடர்ந்து வரும் ட்ரெயின் ஆக்‌ஷன் காட்சிகள், அதோடு கிளைமேக்ஸ் பிரமாண்ட மான்ஸ்டர் உடன் மோதும் மினியன்ஸ் காட்சிகள் எல்லாம் கலக்கியுள்ளனர்.

க்ளாப்ஸ்

மினியன்ஸ் அட்டகாசங்கள்

படத்தின் கான்செப்ட்

மான்ஸ்டர் காட்சிகள்

பல்ப்ஸ்

மினியன்ஸ் படம் என்றாலே இதுதான் என்ற டெம்ப்ளேட்-கள் காட்சிகள் சிக்கியுள்ளது.

மொத்தத்தில் மினியன்ஸ் & மாஸ்டர்ஸ் கலகலப்பிற்கு பஞ்சமில்லைகாட்சிகள்.

Minions & Monsters திரை விமர்சனம் | Minions And Monsters Movie Review

LATEST News

Trending News