தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
ஜனநாயகன்
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பொங்கலுக்கு வெளிவரவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக 6 மாதங்கள் கழித்து தற்போது வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகிறார்கள். கொண்டாட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், கலவையான விமர்சனங்களும் இப்படத்தின் மீதி வைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு வசூல்
விஜய்யின் திரைப்படங்கள் என்றாலே கண்டிப்பாக வசூல் விவரங்களை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள்.

இந்த நிலையில், தற்போது 2 நாட்களில் தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் ரூ. 48 கோடி வசூல் செய்துள்ளது.