இந்தியாவில் வசூல் வேட்டையாடி வரும் ஸ்பைடர் மேன்.. 5 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

இந்தியாவில் வசூல் வேட்டையாடி வரும் ஸ்பைடர் மேன்.. 5 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

உலகளவில் கொண்டாடப்பட்டு வரும் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் இந்தியாவில் 5 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

 

ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே

மார்வெல் தயாரிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கும். அதிலும், அவென்ஜர்ஸ், ஸ்பைடர் மேன் திரைப்படங்களை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.

இந்தியாவில் வசூல் வேட்டையாடி வரும் ஸ்பைடர் மேன்.. 5 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Spiderman Brand New Day 5 Days India Box Office

வசூல்

அப்படி, இந்திய ரசிகர்களால் தற்போது ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் மாபெரும் அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆம், இப்படம் வெளியாகி 5 நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை இந்திய பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ரூ. 335 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

இந்தியாவில் வெளிவரும் திரைப்படங்களுக்கே 5 நாட்களில் இவ்வளவு பெரிய வசூல் வரவேற்பு கிடைப்பது எளிதல்ல. ஆனால், அதனை ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் அசால்ட்டாக செய்துள்ளது என்பது மாபெரும் விஷயம் தான். கண்டிப்பாக இந்தியாவில் மட்டுமே ரூ. 500 கோடியை இப்படம் தொடும் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

 

இந்தியாவில் வசூல் வேட்டையாடி வரும் ஸ்பைடர் மேன்.. 5 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Spiderman Brand New Day 5 Days India Box Office

ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படமே இவ்வளவு பெரிய வசூல் சாதனையை இந்தியாவில் செய்துள்ளது என்றால், இந்த வருடத்தின் இறுதியில் வெளிவரவிருக்கும் அவென்ஜர்ஸ்: டூம்ஸ்டே திரைப்படம் எவ்வளவு சாதனை படைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News

HOT GALLERIES