முதல் நாளே ரூ.170 கோடியா? வசூல் வேட்டைக்குத் தயாராகும் ரன்பீர் கபூரின் ‘ராமாயணா’!
பாலிவுட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்றான ‘ராமாயணா’ இன்று (நவம்பர் 5) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் சுமார் ரூ.2000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், படத்தின் முதல் நாள் வசூல் குறித்த கணிப்புகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதன்படி, வெளியான முதல் நாளிலேயே உலகளவில் சுமார் ரூ.170 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வசூலில் புதிய சாதனை படைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!