அய்யனார் துணை சீரியல்: கர்ப்பமாக இருக்கும் சந்தா!! அதிர்ச்சியில் குடும்பத்தினர்.. வெளிவந்த ப்ரோமோ
அய்யனார் துணை சீரியலில் இன்றைய எபிசோடில் தான் கர்ப்பமாக இருப்பதாக சந்தா கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அய்யனார் துணை
விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக அய்யனார் துணை உள்ளது. இந்த சீரியலில் தற்போதைய கதைகளம்படி, சந்தாவிற்கு அவருடைய மாமாவுடன் கட்டாய திருமணம் நடக்கவுள்ளது. இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று, சேரன், சோழன், பாண்டியன், நிலா மற்றும் பல்லவன் என மொத்த குடும்பமும் பீகாருக்கு கிளம்பினார்கள்.

பீகாருக்கு சென்று பார்த்தால் சந்தாவின் வீடு பூட்டப்பட்டுள்ளது. இதன்பின் அக்கம்பக்கத்தில் விசாரிக்கும்போது, சந்தாவிற்கு இன்று திருமணம், அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் மண்டபத்தில் உள்ளனர் என தெரியவருகிறது.
திருமணம்
உடனடியாக சேரன், சோழன் உள்ளிட்ட அனைவரும் அடிபிடித்து மண்டபத்திற்கு செல்கின்றனர். அங்கு சந்தா வீட்டாருக்கும் அய்யனார் துணை குடும்பத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடக்கிறது. இருப்பினும் சந்தாவிற்கு அவருடைய மாமாவுடன் தான் திருமணம் நடக்கும் என சந்தாவின் தந்தை பிடிவாதமாக இருக்கிறார்.

ஆனால், சந்தா தன்னை எப்படியாவது இங்கிருந்து அழைத்து சென்றுவிடுங்கள் என சேரனிடம் அழுதுகொண்டே கேட்கிறார். மீண்டும் இரு குடும்பங்களுக்கு இடையே சண்டை நடக்க, சந்தா கழுத்தில் தாலியை கட்ட அவருடைய மாமன் முயற்சி செய்கிறார்.

கர்ப்பமாக இருக்கும் சந்தா
இந்த சமயத்தில், 'நான் கர்ப்பமாக இருக்கிறேன்' என சந்தா கூற அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். 'திருமணத்தை நிறுத்துவதற்காக இப்படி சொல்கிறாயா' என அவருடைய தாய் கேட்க, அமைதியாக இருக்கிறார் சந்தா.

இன்றைய எபிசோட் நிறைவுபெற்ற நிலையில், இனி அடுத்து நடக்கப்போவது என்ன என்பதை பற்றி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருப்பீர்கள். அதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ பாருங்க.