சான்ஸ் இல்லனா என்ன.. சப்ஸ்கிரைப் இருக்கு.. இன்ஸ்டாகிராமில் கல்லா கட்டும் அபிராமி!
சென்னை: சோசியல் மீடியாவின் வளர்ச்சி அபரிமிதமானதாக உள்ளது. இதற்கு முன்னாடி பேஸ்புக் மட்டுமே கோலோச்சிய நிலையில், இப்போ இன்ஸ்டாகிராம், எக்ஸ் என பல சமூக வலைதளங்கள் படையெடுத்து வந்துவிட்டன. இவற்றின் மூலம் விதவிதமான ரீல்ஸ்கள், கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு சிலர் பயன் அடைந்து, ஓவர் நைட்டில் பெரிய விஐபியாகவே பிரபலமாகி வருகிறார்கள்.
நடிகைகளுக்குச் சிம்ம சொப்பனம்: அந்த வகையில், இப்போது நடிகைகளுக்கெல்லாம் மிகப்பெரிய சிம்ம சொப்பனமாக அமைந்திருப்பதுதான் இந்த இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரைப். இந்த சப்ஸ்கிரைப் மூலம் மாதம் ரூ. 199 முதல் ரூ. 16,000 வரை சந்தாவை செலுத்தி, தங்களுக்கு பிடித்தமான நடிகைகளின் பிரத்தியேகமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் முறை, இது இணையத்தில் ஒரு செம மாஸ் புது பிசினஸாகவே பார்க்கப்பட்டு வருகிறது, சினிமாவில் வாய்ப்பிழந்த ஒருசில நடிகைகள், இந்த சப்ஸ்கிரைப் ஆப்ஷன் மூலமாகவே மாதா மாதம் லட்சக்கணக்கில் பணத்தைச சம்பாதித்து வருகின்றனர். அந்த வரிசையில், ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, அப்புறம் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபிராமி வெங்கடாச்சலம், இப்போ இந்த சப்ஸ்கிரைப் மூலம் நல்ல வருமானத்தை பெற்று வருகிறார்.
அபிராமி வெங்கடாசலம்: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த அபிராமிக்கு சினிமாவில் பெரிய வாய்ப்பு எதிர்பார்த்தார். தல அஜித்துடன் 'நேர்கொண்ட பார்வை' படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், வேறு வழியின்றி சின்னத்திரைக்கு நுழைந்து சீரியலில் நடித்தார். ஆனால், அந்த சீரியலையும் பாதியிலேயே இழுத்து மூடிவிட்டார்கள்.
திணறும் இன்ஸ்டா: இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பிய அபிராமி, தற்போது இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரைபர்கள் மூலம் செம வருமானத்தை ஈட்டி வருகிறார். அந்த வகையில், தனக்கு மாதம் சந்தா செலுத்தும் சப்ஸ்கிரைபர்களுக்காக மட்டும் பிரத்தியேகமாக அவர் பதிவிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இப்போது இணையத்தில் லீக் ஆகி உள்ளது. அதில் ரோஜா பூக்கள் பதித்த கருப்பு நைட் ரோப் உடையில், செம கிளாமராக அவர் கொடுத்துள்ள போஸ் இப்போது நெட்டிசன்களின் தூக்கத்தைக் கெடுத்து இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது. வெள்ளித்திரை கதவை சாத்தினாலும், இன்ஸ்டாகிராம் கதவை திறந்து சப்ஸ்கிரைப் மூலம் லட்சக்கணக்கில் கல்லா கட்டும் அபிராமி... வாய்ப்பு இல்லனா என்னப்பா, கல்லா கட்ட வழி இருந்தா போதும் என்ற முடிவில் இன்ஸ்டாவை திணறடித்து வருகிறார்.