இலங்கையில் ஜாலி பண்ணும் நடிகை தர்ஷனா ஸ்ரீபால்!! புகைப்படங்கள்..
வெள்ளித்திரை நடிகைகளை விட தற்போது சின்னத்திரை நடிகைகளுக்காக மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு காரணம் சின்னத்திரை நடிகைகள் நாள்தோறும் தொலைக்காட்சிகளில் வருவதுதான்.
அதே நேரத்தில் சோசியல் மீடியாக்களில் தினமும் ஏதாவது ஒரு பதிவினை போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள். அந்தவகையில் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை தர்ஷனா ஸ்ரீபால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
தர்ஷனா ஸ்ரீபால்

தமிழும் சரஸ்வதியும், சித்தி 2, பூவா தலையா போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் தர்ஷனா. ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் ஒளிப்பரப்பாகி வரும் ரிசார்ட் வெப் தொடரிலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
சீரியலில் ஹோம்லி லுக்கில் காணப்படும் தர்ஷனா, நிஜ வாழ்க்கையில் கிளாமர் குயினாக திகழ்ந்து வருகிறார். தற்போது இலங்கைக்கு வெகேஷனுக்கு சென்றுள்ள தர்ஷனா, அங்குள்ள கடற்கரை உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.