மகேஷ் பாபு பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘வாரணாசி’ படத்தின் ‘ருத்ரா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தின் ‘ருத்ரா’ கதாபாத்திர ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ என பிரம்மாண்ட படங்களை இயக்கிய எஸ்.எஸ். ராஜமௌலி, அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து இயக்கி வரும் இப்படம் சர்வதேச தரத்தில் ஆக்ஷன் அட்வென்ச்சர் திரைப்படமாக உருவாகி வருகிறது.
இதுவரை பார்த்திராத வகையில் நீண்ட தலைமுடி மற்றும் அடர்ந்த தாடியுடன் முரட்டுத்தனமான தோற்றத்தில் மகேஷ் பாபு காட்சியளிக்கிறார். இப்படத்தில் அவர் ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில், ஆப்பிரிக்காவின் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒட்டகச்சிவிங்கிகள் பின்னணியில் நிற்க, கம்பீரமான தோற்றத்தில் மகேஷ் பாபு காட்சியளிக்கிறார். காடுகளுக்குள் சாகசப் பயணம் மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளராக அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருப்பதை இந்த லுக் உணர்த்துகிறது.
மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இந்த புதிய தோற்றம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.