சீன்’ படத்திற்காக சூர்யா வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா? வெளியான தகவல்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லென் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.
முதல் நாள் வசூல்
நவம்பர் 6ஆம் திகதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. முதல் நாளில் உலகளவில் ரூ.36 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூர்யாவின் சம்பளம் எவ்வளவு?
இந்நிலையில், ‘சீன்’ திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் சூர்யா பெற்ற சம்பளம் குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
அதன்படி, இப்படத்திற்காக சூர்யாவுக்கு சுமார் ரூ.15 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்தச் சம்பளத் தொகை தொடர்பான தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.