முதல் நாளில் ரூ. 155 கோடி வசூலித்த “ராமாயணா” - அதிகாரபூர்வ அறிவிப்பு...
இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படம், வெளியான முதல் நாளிலேயே வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ், சன்னி தியோல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம், நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
சுமார் ரூ.2,000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர்.
முதல் நாள் வசூல் எவ்வளவு?
இந்நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘ராமாயணா’ திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.155 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் தீபாவளி தொடர் விடுமுறையைக் கருத்தில் கொண்டு, அடுத்தடுத்த நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.155 கோடி வசூலுடன் அதிரடியாகத் தொடங்கியுள்ள ராமாயணா, இனி என்னென்ன சாதனைகளைப் படைக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!