பாக்ஸ் ஆபிஸ்: 14 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
14 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஸ்வநாத் & சன்ஸ்
2026-ஆம் ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று விஸ்வநாத் & சன்ஸ். அதுவும் கருப்பு படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் இப்படம் வெளியானதால், வழக்கத்தை விட இரட்டிப்பு எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது இருந்தது.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாளிலிருந்தே விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் வசூல் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், 14 நாட்களில் உலகளவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 14 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் ரூ. 152 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.