பாக்ஸ் ஆபிஸ்: 9 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் 9 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஸ்வநாத் & சன்ஸ்
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியான திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ்
விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து முதல் நாளிலிருந்தே பார்த்து வருகிறோம். அந்த வகையில், தற்போது 9 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உலகளவில் ரூ. 170 கோடி வசூலித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் ரூ. 45 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.