மண்டாடி பார்த்துவிட்டு உதயநிதி செய்த ஃபோன்.. மனம் திறந்து பேசிய சூரி.. ஓபனா சொல்லிட்டாரு ப்பா
சென்னை: சூரி நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் மண்டாடி திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டிருக்கிறது. இந்நிலையில் படம் பார்த்துவிட்டு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டியதை பகிர்ந்திருக்கிறார் சூரி.
காமெடியனான சூரி; வெற்றிமாறனின் இயக்கத்தில் கதையின் நாயகனாக அறிமுகமானார். முதல் படமே மெகா வரவேற்பை பெற்றது.அடுத்ததாக அவர் நடித்த கொடுக்காளி, கருடன், விடுதலை 2, மாமன் ஆகிய படங்களுமே அவருக்கு நல்ல பெயரைத்தான் பெற்றுக்கொடுத்தன. அதிலும் கருடன் திரைப்படம் பல கோடி ரூபாய் வசூலை அள்ளி; அவருக்கான மாக்கெட்டை திறந்து வைத்தது. மேலும் கமர்ஷியல் ரீதியான விஷயங்களை செய்யலாம் என்ற நம்பிக்கையையும் அவருக்கு ஏற்படுத்தியது.

மண்டாடியில் சூரி: அந்த தெம்போடு அவர் இப்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் சத்யராஜ், மஹ்மா நம்பியார், சுஹாஸ், மிதுன் என பலர் நடித்திருக்கிறார்கள்.ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இதுவரை தமிழ் சினிமாவில் அதிக்ம் பேசப்படாத பாய்மர படகு போட்டியை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு பான் இந்தியா படமாக தியேட்டர்களில் வெளியானது.
படம் மெகா ஹிட்: படமானது ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இயக்குநரின் திரைக்கதையும், பாய்மர படகு போட்டியை அவர் ப்ரெசண்ட் செய்த விதமும் அத்தனை இயல்பாகவும் பரபரப்பாகவும் இருந்தது. சூரியும் தன்னுடைய தரமான நடிப்பின் மூலம், தான் ஒரு கமர்ஷியல் ஹீரோதான் என்பதை நிரூபித்திருக்கிறார். இதுவரை படமானது மொத்தம் 80 கோடி ரூபாயை அள்ளியிருப்பதாக கூறப்படுகிறது.
சூரி பேச்சு: அதுமட்டுமின்றி மண்டாடி படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூரிக்கு ஃபோன் செய்து பாராட்டை தெரிவித்தார். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் பாராட்டியிருப்பதாக தெரிவித்திருக்கிறார் சூரி. அவர் பேசுகையில், "மண்டாடி படத்தை பார்த்துவிட்டு மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி எனக்கு ஃபோன் செய்து பாராட்டினார். அதற்கு நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
நன்றி பிரதர்: ரொம்ப ரொம்ப நன்றி பிரதர். படத்தின் ஒவ்வொரு சீனையும் அவர் பாராட்டி பேசினார். இயக்குநரும், அவரது யூனிட்டும்கூட படத்தில் இருக்கும் சீன்களை இவ்வளவு தெளிவாக, விரிவாக சொல்லமாட்டார்கள் என்றே தோன்றுகிறது" என்றார். முன்னதாக, ரஜினிகாந்த் பாராட்டியதையும் அவரது ஸ்டைலில் சொல்லி காண்பித்திருந்தார் சூரி.