அப்பாவின் அந்தப் பக்கத்தை வெளியே கொண்டு வருவேன்.. விஜய் பற்றி மகன் ஜேசன் ஓபன்
சென்னை: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சிக்மா திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதனையொட்டி அவர் தீவிரமான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அந்தவகையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் தனது தந்தை குறித்த விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சிக்மா படத்தை இயக்கியிருக்கிறார். அதில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். தமன் இசையமைத்திருக்கிறார். அக்டோபர் இரண்டாம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் சூழலில்; அவரது மகன் உள்ளே வந்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எப்படியாவது இந்தப் படத்தை ஹிட்டாக்கிட வேண்டும் என்ற முனைப்பிலும் இருக்கிறார்கள்.

பெரிய தாமதம்: இந்தப் படத்தின் வாய்ப்பை சங்கீதா தரப்புதான் வாங்கிக்கொடுத்ததாக தெரிகிறது. அதேசமயம் ஜேசனும் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார். இயக்குநராகும் வாய்ப்பு கிடைத்தாலும் உடனடியாக யாரும் அவரது இயக்கத்தில் நடிக்க ஓகே சொல்லவில்லை. சூரி, கவின் உள்ளிட்டோரிடம் கதை சொல்லி ரிஜெக்ட் ஆனதாகவும் ஒரு தகவல் ஓடியது. மேலும் துல்கர் சல்மானிடமும் இரண்டு மணி நேரம் கதை சொல்லியிருக்கிறார்.
ஹிட்டாகுமா?: அவரும் ஆர்வமாக கேட்டுவிட்டு இறுதியாக தேதி இல்லை என்று கையை விரித்துவிட்டார். அதற்கு பிறகுதான் சந்தீப் கிஷன் ஹீரோவாக கமிட்டாகியிருக்கிறார். கல்லூரியில் படித்த அத்தனை விஷயங்களையும் இதில் ஜேசன் அப்ளை செய்திருக்கிறாராம். கண்டிப்பாக படம் பெரிய அளவில் ஹிட்டடிக்கும் என படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். அக்டோபர் இரண்டாம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்தை முடித்த பிறகு ஹீரோவாக நடிக்கவும் வாய்ப்புகள் அதிகமாம்.
ஜேசன் சஞ்சய் பேட்டி: ரிலீஸுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாகியிருக்கிறார் ஜேசன். அந்தவகையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "என் தந்தையின் நகைச்சுவை உணர்வை திரையில் பார்ப்பது எனக்கு பிடிக்கும். வீட்டில் அவருடைய தனிப்பட்ட பக்கத்தையும் நான் பார்த்திருக்கிறேன்.
வெளிக்கொண்டு வருவேன்: அவருக்குள் இருக்கும் அந்த நகைச்சுவை உணர்வு என்பது அவரிடம் இருக்கும் குழந்தைத்தனமான இயல்பு என்பதும் எனக்கு தெரியும். ஒரு கட்டத்தில் முழுக்க முழுக்க காமெடி கதாபாத்திரங்களிலும், நம்முண்ட எளிதில் கனெக்ட் ஆகக்கூடிய கேரக்டர்களிலும் அதை குறைத்துக்கொண்டார். எனக்கு அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அப்பாவின் அந்தப் பக்கத்தை திரையில் வெளிக்கொண்டு வருவேன்.
குடும்ப பாரம்பரியம்: குடும்பத்தின் பாரம்பரியம் இப்போதைய அரசியல் மாற்றங்களுடன் சேர்ந்து என்றென்றும் தொடரும். மறுபுறம் திரையுலகத்தில் எனக்கென ஒரு தனி முத்திரையை பதிப்பதற்காக இந்தப் படத்தை நான் இயக்கியிருக்கிறேன். சிக்மா படத்துக்கு பிறகு படத்தின் வெற்றியும் அதன் மூலம் கிடைக்கும் அறிமுகமமும் எனக்கான சொந்த அடையாளத்தை உருவாக்குவதில் உதவும் என நம்புகிறேன். அதில் கவனமும் செலுத்துவேன்" என்றார்.