பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்

Mandaadi movie 11 days worldwide collection: சூரி நடிப்பில், இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியான மண்டாடி திரைப்படம் உலகளவில் 11 நாட்களில் செய்துள்ள வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.

 

மண்டாடி

படகு போட்டியை மையமாக வைத்து அதில் முத்துகாளி - சாட்டா புலி என இரு கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் கொண்டு உருவான திரைப்படம் மண்டாடி. இப்படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்க, சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல் | Mandaadi Movie 11 Days Worldwide Collection

கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி திரைக்கு வந்த மண்டாடி படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தலைமேல் தூக்கி வைத்து மக்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். இதனால் வசூலில் மண்டாடி பட்டையை கிளப்பி வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல் | Mandaadi Movie 11 Days Worldwide Collection

 

பாக்ஸ் ஆபிஸ்

முதல் நாளில் தொடங்கி இன்று வரை ஒவ்வொரு நாளும் வசூலில் சாதனை படைத்து வரும் மண்டாடி திரைப்படம், 11 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த நிலையில், இதுவரை இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் 11 நாட்களில் மண்டாடி திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இதன்மூலம் சூரி ஹீரோவாக நடித்து வெளிவந்து ரூ. 100 கோடி வசூலித்த முதல் படமாக மண்டாடி சாதனை படைத்துள்ளது. மேலும், இந்த ஆண்டு அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப்படங்களில் மண்டாடி திரைப்படமும் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News