அம்மன் வேஷம் முடிஞ்சதும் இப்படி ஒரு லுக்கா? நயன்தாராவின் சூடான கடற்கரை போட்டோஸ்!

அம்மன் வேஷம் முடிஞ்சதும் இப்படி ஒரு லுக்கா? நயன்தாராவின் சூடான கடற்கரை போட்டோஸ்!

சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் ஜாலியாக காற்று வாங்கியபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியான உடைகளுடன் இருக்கும் வீடியோக்களையோ பெரிதாக வெளியிடாமல் இருந்து வந்த நயன்தாரா, தற்போது கவர்ச்சி சற்று தூக்கலாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ஒரு மணி நேரத்திலேயே லட்சக்கணக்கான லைக்குகளை குவித்து வருகிறது.

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில், தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் நயன்தாரா. அந்த வகையில், நயன்தாரா நடிப்பில் அண்மையில் வெளியான Taxic திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் யாசினின் அக்காவாக நடித்திருந்த நயன்தாரா, சிகரெட் பிடிப்பது, குடிப்பது என அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் நடித்து இருந்தார். ஆனால் அந்த திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வரவேற்பை பெறாததால், படம் வெளியான வேகத்திலேயே கவனம் பெறாமல் போனது.

Lady Superstar instagram Photoshoot

மூக்குத்தி அம்மன் 2: அந்த படத்தை தொடர்ந்து ஹாய் திரைப்படத்தில் நடித்திருந்தார் நயன்தாரா. இந்த திரைப்படம் அவருக்கு கணிசமான வசூலை பெற்றுத் தந்தது. தற்போது நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் டிரைலரும் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அனைவரும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், தற்போது நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் ஜாலியாக காற்று வாங்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

Lady Superstar instagram Photoshoot

என்ன ஆச்சு நயனுக்கு: அந்த புகைப்படங்களில் குட்டி உடை அணிந்து கொண்டு, கூலிங் கிளாஸ் போட்டு ஆட்டகாசமாக போஸ் கொடுத்திருக்கிறார் நயன்தாரா. திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் குடும்பப் படங்கள் மற்றும் ஹோம்லி கெட்டப் புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து வந்த நயன்தாரா, தற்போது கடற்கரையில் ஜாலியாகக் காற்று வாங்கியபடி எடுத்துக்கொண்ட கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். கூலிங் கிளாஸ் மாட்டி, குட்டி ஆடையில் கவர்ச்சி சற்று தூக்கலாக இருக்கும் வகையில் அவர் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளன.
 

LATEST News

Trending News