திருமண பந்தத்தில் இணையும் சூப்பர் சிங்கர் பாடகி ஸ்ரீநிஷா - சாம் விஷால்; நிச்சயதார்த்த போட்டோஸ்

திருமண பந்தத்தில் இணையும் சூப்பர் சிங்கர் பாடகி ஸ்ரீநிஷா - சாம் விஷால்; நிச்சயதார்த்த போட்டோஸ்

2014-ம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான அவன் இவன் படத்தில் இடம் பெற்ற ஒரு மலையோரம் என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் ஸ்ரீநிஷா,

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது தமிழ் சினிமாவில் பாடகியாக இருக்கும் ஸ்ரீநிஷாவுக்கும் அவரது நீண்ட நாள் காதலரான பாடகர் சாம் விஷாலுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பல பாடகர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். அந்த வரிசையில் வந்தவர் தான் ஸ்ரீநிஷா. அதேபோல் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் சாம் விஷாலும். தனது 7 வயதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அடியெடுத்து வைத்த ஸ்ரீநிஷா தனது தனித்துவமான குரலின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தார். ஆனால் போட்டியின் அரையிறுதியில் எலிமினேட் செய்யப்பட்ட அவர், இசைத்துறையில் தனது பயணத்தை தொடர்ந்தார். 

2014-ம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான அவன் இவன் படத்தில் இடம் பெற்ற ஒரு மலையோரம் என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமான ஸ்ரீநிஷா, அதன்பிறகு இளையராஜா இசையில் அம்மா கணக்கு, சந்தோஷ் நாராயணன் இசையில் காதலும் கடந்து போகும், ஹிப் ஹாப் தமிழ இசையில் இமைக்கா நொடிகள், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 99 சாங்ஸ், இமான் இசையில், லாபம், உள்ளிட்ட பலர் இசையில் பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வந்த ஸ்ரீநிஷா, சாம் விஷால் இருவரும் சமூகவலைதளங்களில் ஆக்டீவாகடி இருந்து வரும் நிலையில், இருவரும் ஒருவருடைய பதிவுக்கு ஒருவர் கமெண்ட் போடுவது, பார்ட்னர் என்று கேப்ஷன் கொடுப்பது என சில வருடங்களாகவே செய்து கொண்டிருந்தனர். இதனை வைத்து இவர்கள் காதலிக்கிறார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில எழுந்த நிலையில், இந்த கேள்விக்கு தற்போது விடை அளிக்கும் விதமாக இருவரும் தங்கள் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். 

சாம் விஷால் - ஸ்ரீநிஷா இருவரும் கடந்த சில ஆண்டுகளாக மேடை நிகழ்ச்சிகளில் ஒன்றாக பாடி ரசிகர்கள் மனதில் தங்களுக்கென தனி இடத்தை பிடித்த நிலையில், இவர்கள் இருவரும் தற்போது வாழ்க்கையிலும் ஒன்றாக இணைய உள்ளனர். இந்த நிச்சயதார்த்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரீநிஷா, விஷ் மோட் 11:11 என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

LATEST News

Trending News