பாக்ஸ் ஆபிஸ்: தமிழ்நாட்டில் 4 நாட்களில் சீன் திரைப்படம் செய்துள்ள வசூல்
Scene movie Tamil Nadu 4 days Box office: சீன் திரைப்படம் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், 4 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள இப்படம் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
சீன்
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான நடிகர் சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கருப்பு மற்றும் விஸ்வநாத் & சன்ஸ் ஆகிய இரண்டு திரைப்படங்கள் மாபெரும் வெற்றிபெற்றது. இதுவே அவருடைய ரசிகர்களுக்கு பெரும் ஆனந்தம் என இருக்க, இந்த ஆண்டு இரண்டு அல்ல மூன்று என சொல்லி ட்ரிபிள் ட்ரீட் கொடுத்துள்ளார் சூர்யா.
ஆம், கடந்த வாரம் வெளியான சீன் திரைப்படமும் சூர்யாவின் வெற்றி பயணத்தை தொடர, இந்த ஆண்டு ஹாட்ரிக் அடித்துள்ளார். இதுமூலம் ஒரே ஆண்டில் மூன்று ஹிட் திரைப்படங்களை கொடுத்த நடிகர்களின் பட்டியலில் சூர்யா இணைந்திருக்கிறார்.

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்
சீன் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி இதுவரை நான்கு நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நான்கு நாட்களில் இப்படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக இப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் அறிவித்துள்ளது.