சர்தார் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் கார்த்தி, எந்தெந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்கின்றார் தெரியுமா?
கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளியான சுல்தான் திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.
அதனை தொடர்ந்து கார்த்தி இயக்குனர் P.S.மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.
இந்நிலையில் சர்தார் திரைப்படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம், சர்தார் திரைப்படத்தில் கார்த்தி போலீஸ் மற்றும் உளவாளி என இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இப்படத்தில் ராஷி கண்ணா மற்றும் ராஜீஷா விஜயன் என இரண்டு கதாநாயகிகள் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.