பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் சிக்மா திரைப்படம் செய்துள்ள வசூல்
Sigma movie 3 days box office: ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.
சிக்மா
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி, மக்களின் பேராதரவோடு இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமர்ந்திருப்பவர் தளபதி விஜய். இவர் சினிமாவை விட்டு வெளியேறிய நிலையில், இவருடைய மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார்.
இவர் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் சிக்மா. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். சம்பத், ஷிவ் பண்டிட், ராஜு சுந்தரம், அன்பு தாசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பாக்ஸ்
ஆபிஸ் ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் வசூல் குறித்த விவரங்களை நாம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள சஞ்சய்யின் சிக்மா திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 6 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.