சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்.. கண்கலங்கிய கமல்ஹாசன்.. அபூர்வ சகோதரர்கள் இயக்குநருக்கு நேரில் அஞ்சலி

சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்.. கண்கலங்கிய கமல்ஹாசன்.. அபூர்வ சகோதரர்கள் இயக்குநருக்கு நேரில் அஞ்சலி

சென்னை: இந்திய திரையுலகின் மூத்த ஜாம்பவான் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் தனது 95 வயதில் காலமானார். அவரது மறைவு செய்தி அறிந்து உடைந்துப் போன கமல்ஹாசன் நேரில் வந்து கண்கலங்கி அஞ்சலி செலுத்திய காட்சிகள் வெளியாகி உள்ளன. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இந்திய சினிமாவின் லெஜண்டரி டைரக்டரான சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் காலமானது திரைத்துறைக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kamal Haasan attends Singeetham Srinivasa Rao Funeral with Teary Eyes

ராஜபார்வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன் உள்ளிட்ட பல படங்களில் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ளார்.

கமல்ஹாசனை சிறந்த நடிகராகவும் இயக்குநராகவும் மாற்றிய பங்கில் பால்சந்தரை போலவே சிங்கீதம் சீனிவாச ராவுக்கும் பெரிய பங்கு உள்ளது என்றால் அது மிகையல்ல.

மறைந்தது பேசும் படம்: ராஜபார்வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன், காதலா காதலா என கமல்ஹாசனை வைத்து மற்ற இயக்குநர்கள் கூட சிந்திக்க முடியாத அளவுக்கு உலகின் ஆகச் சிறந்த படங்களாக தமிழ் சினிமாவுக்குக் கொடுத்த மாபெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவு ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கும் பேரிழப்பாக மாறியுள்ளது.

Kamal Haasan attends Singeetham Srinivasa Rao Funeral with Teary Eyes

கமல் நேரில் அஞ்சலி: சிங்கீதம் சீனிவாச ராவின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 2 மணிக்கு இறுதிச்சடங்குகள் தொடங்கி 4 மணிக்கு இறுதிச்சடங்குகள் நிறைவடையும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது ஆருயீர் சகோதரரை போன்றவரும் நண்பருமான சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவு செய்தி அறிந்ததும் அவரது இல்லத்துக்கு ஓடோடி வந்து கமல்ஹாசன் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜனை மறக்க முடியுமா?: கமல்ஹாசனை வைத்து மொழியே இல்லாமல் பேசும் படம் என்கிற படத்தை இயக்கி சாதனை படைத்த சிங்கீதம் சீனிவாச ராவ் இவரை வைத்து எந்த எக்ஸ்பீரிமென்ட் வேண்டுமானாலும் செய்யலாம் என செய்த அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன் படத்தை எல்லாம் என்றைக்குமே மறக்க முடியாது. தமிழ் சினிமாவின் பொக்கிஷங்களாகவும் சினிமாவுக்கு வரத் துடிப்பவர்களுக்கான பயிற்சி பட்டறையாகவே இந்த படங்கள் இன்றும் திகழ்கின்றன.

 

LATEST News

Trending News