இது அருவருப்பான.. டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை.. ஆபாச AI வீடியோவால் கொதித்த ஜான்வி கபூர்!

இது அருவருப்பான.. டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை.. ஆபாச AI வீடியோவால் கொதித்த ஜான்வி கபூர்!

சென்னை: ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தடக் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர், 'தேவரா' படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய சினிமாவில் கால் பதித்தார். தேவரா படத்தில் இடம் பெற்ற 'பத்தவைக்கும் பார்வைகாரா' பாடலில் ஜான்வி கபூர் நடித்த காட்சிகளை, AI தொழில்நுட்பத்தின் மூலம் ஆபாசமாக மாற்றி இணையத்தில் சிலர் பரப்பியுள்ளனர். இந்த அநாகரீக செயலை நடிகை ஜான்வி கபூர் கடுமையாக கண்டித்துள்ளார்.

bollywood Janvi kapoor Deep fake

ஜான்வி கபூர் ஆவேசம்: இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக நீண்ட உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி, பெண்களின் அனுமதியின்றி ஆபாசமாக மாற்றி பரப்புவது மிகப்பெரிய குற்றமாகும். இது பாலியல் வன்கொடுமைக்கு சமமானது. சினிமா துறையில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் ஏதோ ஒரு வகையில் இதை எதிர்கொண்டு தான் வருகிறார்கள். ஒரு பெண் 5 நாட்களுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டு, 6வது நாள் 'வேண்டாம்' என்று சொன்னால், அந்த 'வேண்டாம்' என்ற வார்த்தை மதிக்கப்பட வேண்டும். ஒரு பெண் குட்டை பாவாடை அணிகிறார் என்பதற்காக, அவரது அனுமதி இல்லாமல் கேமரா வச்சு போட்டோ எடுப்பதோ, அவரது உடலை தவறாக பயன்படுத்த யாருக்கும் உரிமையில்லை. தன் உடலை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும், எதுவரை தனக்கு ஓகே என்பதை தீர்மானிக்கும் முழு உரிமை அந்த பெண்ணுக்கு மட்டுமே உள்ளது.

bollywood Janvi kapoor Deep fake

ஜூனியர் என்.டி.ஆர் எதிர்ப்பு: இந்த விவகாரத்தில் ஜான்வி கபூருக்கு ஆதரவாக 'தேவரா' பட ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர் தனது இன்டஸ்டாகிராம் கடும் கண்டத்தை தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், AI தொழில்நுட்பத்தை இப்படி ஆபாசமாக பயன்படுத்துவது வெட்கக்கேடானது, அருவருப்பானது. இத்தகைய வீடியோவை யாரும் பார்க்கவோ, பகிரவோ வேண்டாம். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எச்சரித்துள்ளார். அதேபோல் நடிகர் விஜய் தேவரகொண்டா, இது ஒரு டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை எனக் கண்டித்துள்ளார். மெகாஸ்டார் சிரஞ்சீவி, குஷ்பூ உள்ளிட்ட பல பிரபலங்களும் ஜான்வி கபூருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இந்த மார்பிங் குறித்து ஜான்வி கபூர் சைபர் க்ரைமில் புகார் அளித்து இருக்கும் நிலையில், இந்த வீடியோவை உருவாக்கியது யார் என போலீசார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.
 

LATEST News

Trending News