'மாஸ்டர்' நடிகரின் மாஸ் பஞ்ச்: இன்ஸ்டாவில் வைரல்!

'மாஸ்டர்' நடிகரின் மாஸ் பஞ்ச்: இன்ஸ்டாவில் வைரல்!

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் திரையரங்குகளில் வெளியான 15 நாட்களில் ஓடிடியிலும் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் சின்னச்சின்ன கேரக்டரில் நடித்தவர்கள் கூட பெரிய அளவில் புகழ் பெற்றார்கள் என்பதும் குறிப்பாக பத்து நிமிடங்கள் மட்டும் வரும் குட்டி பவானி கேரக்டரில் நடித்த மாஸ்டர் மகேந்திரன் தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மாஸ்டர் மகேந்திரன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பஞ்ச் வசனத்தை பதிவு செய்து லேட்டஸ்ட் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். ‘நீங்கள் எப்போதும் அசலாக இருங்கள், உங்களை பார்த்து உலகம் நகலெடுக்கட்டும் என்று பதிவு செய்த பஞ்சு வசனம் தற்போது வைரலாகி வருகிறது

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் மகேந்திரன், தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் "D 43" படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படமும் அவருக்கு ’மாஸ்டர்’ படத்தைப் போலவே பெரும் புகழை பெற்று கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES