தன்னை திருமணம் செய்ய விரும்பிய ரசிகருக்கு ப்ரியா பவானிசங்கரின் ஷாக்கிங் பதில்!

தன்னை திருமணம் செய்ய விரும்பிய ரசிகருக்கு ப்ரியா பவானிசங்கரின் ஷாக்கிங் பதில்!

தன்னை திருமணம் செய்ய விரும்பிய ரசிகர் ஒருவரின் கேள்விக்கு அதிரடியான பதிலை ப்ரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த ’மேயாத மான்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான ப்ரியா பவானி சங்கர், அதன்பின் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அவர் சுமார் 10 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் என்பதும் அதில் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ சிம்புவின் ’பத்து தல’ ஆகிய படங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ப்ரியா பவானி சங்கர் அவ்வப்போது ரசிகரின் கேள்விக்கு சுவராசியமாக பதிலளிப்பார். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் ’உங்களைத் திருமணம் செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்வியை கேட்டதற்கு அதற்கு பதில் கூறிய ப்ரியா பவானி சங்கர் ’புதிதாக வருபவர்களுக்கு நான் கொஞ்சம் சிக்கலான நபர். எனவே நீங்கள் என்னை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது உங்களுக்கு நல்லது’ என்று கூறியுள்ளார். ப்ரியா பவானிசங்கரின் இந்த பதில் இன்ஸ்டாகிராமில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

LATEST News

Trending News

HOT GALLERIES