சிவகார்த்திகேயனின் 'டான்' படப்பிடிப்பு எப்போது?

சிவகார்த்திகேயனின் 'டான்' படப்பிடிப்பு எப்போது?

தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து சமீபத்தில் திரைப்பட படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து பெரும்பாலான படப்பிடிப்புகள் தொடங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் ’அண்ணாத்த’ அஜித்தின் ’வலிமை’ விஜய்யின் ‘பீஸ்ட்’ உள்பட பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டான்’ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் 17ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் பூஜையுடன் கூடிய முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் அட்லீயின் உதவியாளரான சிபிச்சக்கரவர்த்தி இயக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகிய இருவரும் கல்லூரி மாணவர்களாக நடிக்கின்றனர். பிரியங்கா அருள்மோகன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் புகழ், ஷிவாங்கி உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News