சொந்தமாக தனி தீவு வைத்திருக்கும் பிரபல பாலிவுட் நடிகை.. அவர் யார்
பாலிவுட் சினிமாவில் உள்ள பிரபலங்களின் சொத்துகளுக்கு எந்த ஒரு குறையும் இல்லை.
விலையுயர்ந்த கார்கள், பங்களாக்கள், ஆடம்பரமான பொருள்கள் என எல்லாமே செம காஸ்ட்லியான விஷயங்களாக வைத்திருப்பார்கள்.
தற்போது பிரபல பாலிவுட் நடிகை வைத்துள்ள ஒரு விஷயம் குறித்த தகவல் தான் வலம் வருகிறது, அதாவது அவர் தனி தீவு ஒன்று வைத்துள்ளாராம்.
இலங்கையை சேர்ந்த இவர் முன்னணி நாயகியாக பாலிவுட் சினிமாவில் கலக்கி வருகிறார். ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே, ஆலியா பட் போன்ற முன்னணி நடிகைகளுக்கு கூட இல்லாத ஒரு தனிப்பட்ட தீவை இவர் வைத்துள்ளார்.
தனியாக தனது சொந்த தீவு வாங்குவதற்காக பிரபல நடிகை ரூ. 3 கோடி வரை செலவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் வேறு யாரும் இல்லை நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் தான்.
கடந்த 2012ம் ஆண்டு ஸ்ரீலங்காவின் தெற்கு கடற்கரையில் 4 ஏக்கர் தனித்தீவு வாங்கியுள்ளார்.