பாலிவுட் நட்சத்திரங்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்ட மாநாடு திரைப்படம்!

பாலிவுட் நட்சத்திரங்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்ட மாநாடு திரைப்படம்!

சிம்புவின் மாநாடு திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இப்போது பாலிவுட் நட்சத்திரங்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி  திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடிப்பில் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக மாநாடு அமைந்துள்ளது. ரிலிஸ் ஆனதில் இருந்து இரண்டாவது வாரம் வரை வசூல் குறையாமல் இருப்பதே இந்த படத்தின் வெற்றியின் சாட்சி.
 

இந்நிலையில் இந்த படத்தை வட இந்தியாவில் ப்ரமோட் செய்யும் விதமாகவும், ரீமேக் ரைட்ஸ் விற்பனை செய்யும் விதமாகவும் மாநாடு திரைப்படத்தை பாலிவுட் நட்சத்திரங்களுக்கு படக்குழு திரையிட்டுக் காட்டியுள்ளது. இந்த திரையிடலின் போது சிம்பு, வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் பிரேம்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES