த்ரிஷா, ஆண்ட்ரியா, ராஷிகண்ணா யாருமில்லை: இவர் தான் 'சந்திரமுகி 2' நாயகி!

த்ரிஷா, ஆண்ட்ரியா, ராஷிகண்ணா யாருமில்லை: இவர் தான் 'சந்திரமுகி 2' நாயகி!

ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சந்திரமுகி 2’ படத்தின் நாயகி குறித்த லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான ’சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தை பி வாசு இயக்க இருப்பதாகவும் பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் முதலில் ராஷி கண்ணா அல்லது ஆண்ட்ரியா நாயகியாக நடிப்பார் என்றும் அதன்பின்னர் த்ரிஷா நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது மேற்கண்ட மூவரும் இல்லை என்றும் லட்சுமிமேனன் தான் இந்த படத்தின் நாயகி என்றும் கூறப்பட்டு வருகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

மேலும் ’சந்திரமுகி’ முதல் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடித்த வைகைப்புயல் வடிவேலு இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லைகா நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 முதல் மைசூரில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES