DC Day 7 Box Office - டிசி 7வது நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸ் எப்படி இருக்கு?.. லோகேஷ் மகிழ்ச்சி

DC Day 7 Box Office - டிசி 7வது நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸ் எப்படி இருக்கு?.. லோகேஷ் மகிழ்ச்சி

சென்னை: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் டிசி. முதன்முறையாக அவர் ஹீரோவாக நடித்திருக்கிறார் என்பதால் ஓரளவுக்கு படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தது. படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்த சூழலில்; வசூலிலும் படம் சக்கைப்போடு போடுவதாக தெரிகிறது. இந்நிலையில் Sacnilk இணையதளம் டிசி வசூல் விவரங்களை வெளியிட்டிருக்கிறது.

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். ரஜினி,கமல், விஜய், கார்த்தி என பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து படங்கள் இயக்கியிருக்கிறார். அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்தும் ஒரு படம் இயக்குகிறார். இப்படி இயக்கத்தில் செம பிஸியாக போய்க்கொண்டிருக்கும் அவர்; நடிகராகவும் மாறியிருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் படத்தில் ஒரு காட்சியில் தோன்றினார். அதனையடுத்து ஸ்ருதிஹாசனின் பாடல் ஒன்றில் ஹீரோவாக தோன்றினார். சூழல் இப்படி இருக்க முழு படத்துக்கே ஹீரோவாக இப்போது மாறியிருக்கிறார்.

DC Day 7 Box Office Collection - Lokesh Kanagaraj s Film Earns 41 65 Crore in 7 Days

லோகேஷின் டிசி: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் டிசி படத்தில்தான் அவர் முழு நேர ஹீரோவாக மாறினார். அவருடன் அதில் வாமிகா கபி, சஞ்சனா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அருணின் மேக்கிங்குக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இளைய தலைமுறை இயக்குநர்களில் அவருக்கென்றும் தனி இடம் உண்டு.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்: இப்படி இளைய தலைமுறை இயக்குநர்களில் முக்கியமான இரண்டு பேர் சேர்ந்து கூட்டணி வைத்தது பலரிடம் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. மேலும், ரிலீஸுக்கு முன்னதாகவே அனிருத்தின் இசை எல்லாம் பட்டையை கிளப்பின. இப்படி எக்கச்சக்க ஹைப்புகளோடு சில நாட்களுக்கு முன்பு தியேட்டர்களில் வெளியானது டிசி. ரசிகர்களும் ஆர்வத்தோடு தியேட்டருக்கு சென்று பார்த்தார்கள். அவர்களை படம் திருப்திப்படுத்தவே செய்தது என்பதும் கவனிக்கத்தக்கது.

சூப்பர் கதை: அருணின் படங்கள் என்றால் அதில் கதையைவிட வன்முறைக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பார் என்ற இமேஜ் இருக்கிறது. இதில் அதையெல்லாம் அடித்து நொறுக்கிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கல்வியின் முக்கியத்துவம், விருப்பமில்லாமல் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்ட பெண், பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கை என அவர் இந்தப் படத்தில் பேசியிருப்பது எல்லாமே முக்கியத்துவம் வாய்ந்த சப்ஜெக்ட்டுகள். என்ன ஒன்று அதை தன் ஸ்டைலில் ரத்தம் தெறிக்க தெறிக்க சொல்லியிருக்கிறார் அவ்வளவுதான்.

படத்தின் வசூல் நிலவரம்: ஆகமொத்தம் படம் விமர்சன ரீதியாக சக்கைப்போடு போட்டுவிட்டது. இந்நிலையில் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகள்படி, ஏழாவது நாளான நேற்று அப்படம் இந்தியாவில் மட்டும் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் வசூலித்ததாம். இதுவரை ஏழு நாட்களில் மொத்தம் 41 கோடியே 65 லட்சம் ரூபாயை வசூலித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மேற்கொண்டு வசூல் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Disclaimer: புதிய படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் குறிப்பிட்ட இந்த தளங்களான https://www.sacnilk.com/, https://x.com/taran_adarsh மற்றும் https://x.com/rameshlaus போன்ற அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ஆதாரங்களிலிருந்து பெறப்பட்டது. பிலிமிபீட் தகவல் நோக்கங்களுக்காக இந்த எண்களை குறிப்பிடுகிறது என்றாலும், அவற்றின் துல்லியத்திற்கு பொறுப்பேற்காது என்பதை நினைவில் கொள்வது முக்கியம். இவை திரைப்பட வருவாயில் நம்பகமான தரவுகளுக்கு பரவலாக அங்கீகரிக்கப்பட்ட தளங்கள், மேலும் அவற்றின் அறிக்கைகளைக் குறிப்பிடுவது ஆன்லைனில் காணப்படும் தகவலை தெரிவிப்பதற்காக மட்டுமே.

LATEST News

Trending News