சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி திவ்யாவா இவர்? லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்!

சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி திவ்யாவா இவர்? லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்!

பெரிய திரை நட்சத்திரங்களுக்கு இணையாக தற்போது சின்னத்திரை நட்சத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பாக தொகுப்பாளினிகளுக்கு என மிகப்பெரிய அளவில் ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிடி, மாகாபா, பிரியங்கா, அர்ச்சனா உள்ளிட்ட பல தொகுப்பாளர்கள் இன்றைய நிலையில் புகழ் பெற்று இருக்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திவ்யா விஜய் என்ற தொகுப்பாளினி ரசிகர்களின் விருப்பத்துக்குரிய தொகுப்பாளினியாக இருந்தார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உள்பட பல நிகழ்ச்சிகளில் இவர் தொகுப்பாளினியாக இருந்தவர் என்பதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொகுப்பாளினியாக மட்டுமின்றி இவர் ஒரு பாடகியும் ஆவார். விஜய் நடித்த ’வில்லு’, விஷால் நடித்த ’தீராத விளையாட்டு பிள்ளை’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் இவர் பாடியுள்ளார். 

இந்த நிலையில் தனது நீண்ட நாள் நண்பரான சிபு தரகன் என்பவரை காதலித்து கடந்த 2019ஆம் ஆண்டு அவரை திவ்யா விஜய் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர் சின்னத்திரை மற்றும் பெரிய திரை ஆகிய இரண்டில் இருந்தும் விலகினார் என்றாலும், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக உள்ளார்.  அவ்வப்போது இவர் தனது கணவருடன் வெளிநாடு சென்ற புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்து வரும் நிலையில் அந்த புகைப் படங்கள், வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES