அந்த இடத்தில் அதை செய்திருக்கிறீர்கள்!! கேவலமாக பேசியவருக்கு பதிலடி கொடுத்த நடிகை மாளவிகா மோகனன்...

அந்த இடத்தில் அதை செய்திருக்கிறீர்கள்!! கேவலமாக பேசியவருக்கு பதிலடி கொடுத்த நடிகை மாளவிகா மோகனன்...

தமிழில் நடிகர் ரஜினிகாந்த், சசிகுமார், திரிஷா நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் மீரா ரோலில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார் நடிகை மாளவிகா மோகனன். இதனை தொடர்ந்து, மாறன், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் தஙகலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து முடித்துள்ளார்.

தி ராஜா சாப், யுத்ரா போன்ற படங்களிலும் நடித்துள்ள மாளவிகா மோகனன், கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். சமீபத்தில் எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது ஒருவர் கிளாமரை விட்டுவிட்டு எப்போது நடிக்க போகுறீர்கள் என்றும் நடிப்பு கிளாஸ்-க்கு எப்போது போகப்போறீர்கள் என்று இன்னொரு ரசிகரும் கேள்வியை கேட்டிருக்கிறார்கள்.

நான் நிறுத்த மாட்டேன், அதில் உங்களுக்கு ஏதேனும் கஷ்டம் இருக்கிறதா? என்றும் நீங்களும் ஏதோ ஒரு வகையில் எனக்கு பொருத்தமான நபராக மாறி, இந்த கேள்வியை கேட்கும் பொழுது நான் நடிப்பு பள்ளிக்கு செல்வேன் என்றும் பதில் கொடுத்திருக்கிறார்.

மேலும், வேறொரு ரசிகர், எப்போவாவது தொப்புள் குத்தியிருக்கிறீர்களா (தொப்புளில் கடுக்கன் குற்றிக்கொள்வது) என்ற கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு மாளவிகா, சரி, நீங்கள் சுறுசுறுப்பான - திருப்திப்படுத்தும் படியான கேள்வி பதிலை எதிர்பார்க்கிறீர்கள், நான் அறிவார்ந்த வேடிக்கையானவற்ரையே தேடுகிறேன். நாம் இருவரும் இரு வேறுபட்ட பக்கங்களில் இருப்பதாக மாளவிகா பதிலடி கொடுத்திருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES