மறைந்த தேனிசைத் தென்றல் தேவாவின் கடைசிப் பாடல் ‘வா சிவா’ வெளியானது!

மறைந்த தேனிசைத் தென்றல் தேவாவின் கடைசிப் பாடல் ‘வா சிவா’ வெளியானது!

தமிழ் திரையுலகின் மறைந்த இசையமைப்பாளரும் பாடகருமான தேனிசைத் தென்றல் தேவாவின் குரலில் பதிவு செய்யப்பட்ட கடைசிப் பாடலான ‘வா சிவா’ வெளியாகியுள்ளது.

இயக்குநரும் நடிகருமான கே.பி.ஜெகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலாக ‘வா சிவா’ வெளியாகியுள்ளது. தேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (நவம்பர் 20) பாடலும் அதற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டுள்ளன.

‘எங்கெங்கோ தேடிப் போனேன்… ஏதேதோ நாடி போனேன்… இப்போ நான் ஆடிப் போனேனே… என் அப்பன் சிவனே…’ எனத் தொடங்கும் இந்தப் பாடலை அறிமுகப் பாடலாசிரியர் சக்தி உமா பாலகிருஷ்ணா எழுதியுள்ளார். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

சிவபெருமானிடம் பக்தன் ஒருவர் மனம் உருகிப் பாடும் ஆன்மிகப் பாடலாக இது அமைந்துள்ளது. பாடலில் தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சிவனடியாராகத் தோன்றியுள்ளார். மேலும், 50-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பாடல் காட்சியில் பங்கேற்றுள்ளனர்.

தேவாவின் இறுதிப் பாடலாக அமைந்துள்ள ‘வா சிவா’ பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் உணர்வுபூர்வமான வரவேற்பைப் பெற்று வருகிறது.

LATEST News

Trending News