'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' பார்க்க 15 படங்கள் தேவையில்லை! இந்த 5 படங்களை மட்டும் பார்த்தால் போதும்.. மார்வெல் ரசிகர்களுக்கு சூப்பர் ஐடியா!

'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' பார்க்க 15 படங்கள் தேவையில்லை! இந்த 5 படங்களை மட்டும் பார்த்தால் போதும்.. மார்வெல் ரசிகர்களுக்கு சூப்பர் ஐடியா!

ஹாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்களில் ஒன்று 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' (Avengers: Doomsday). மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். குறிப்பாக, அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் ரசிகர்களைக் கவர்ந்த ராபர்ட் டவுனி ஜூனியர், தற்போது டாக்டர் டூம் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டூம்ஸ்டே திரைப்படத்தைப் புரிந்துகொள்வதற்கு முன்பாக மார்வெல் வெளியிட்டுள்ள 15 படங்கள் மற்றும் தொடர்களையும் பார்க்க வேண்டுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், நேரம் குறைவாக இருப்பவர்கள் முக்கியமான சில படங்களை மட்டும் பார்த்துத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளலாம்.

 

LATEST News

Trending News