சாய் பல்லவியை நேரில் பாராட்டிய அமித்ஷா! ரூ.1,755 கோடி வசூல் செய்த ‘ராமாயணா’ படக்குழுவுடன் சந்திப்பு!
இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ராமாயணா’ திரைப்படம் உலகளவில் ரூ.1,755.50 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், படக்குழுவினர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பில் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, இயக்குநர் நிதேஷ் திவாரி, நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் இணைத் தயாரிப்பாளர் நிரஜ் சங்கி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, இந்தியாவின் புகழ்பெற்ற இதிகாசமான ராமாயணத்தை மிகப்பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாக்கிய படக்குழுவினருக்கு அமித்ஷா தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
மேலும், ராமாயணத்தின் வரலாறு மற்றும் அதன் கலாசார முக்கியத்துவம் குறித்து அமித்ஷா கொண்டிருந்த ஆழமான அறிவு படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சீதையாக நடித்துள்ள சாய் பல்லவி உள்ளிட்ட நடிகர்களின் பங்களிப்பும் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
கடந்த நவம்பர் 5ஆம் திகதி வெளியான இப்படம், உலகளாவிய வசூலில் ரூ.1,755 கோடியைக் கடந்து இந்தியத் திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.