பிக்பாஸ் சீசன் 8 தொகுப்பாளர் விஜய் சேதுபதியா!
தமிழ் சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்களின் அந்தரங்க புகைப்படங்களை லீக் செய்து சர்ச்சையை ஏற்படுத்திய பாடகி சுசித்ரா மீண்டும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து முன்னாள் கணவர் மற்றும் சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்தினை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.
தற்போது, நடிகர் விஜய் சேதுபதியையும் லிஸ்ட்டில் வேறுமாதிரியான விமர்சனத்தில் சேர்த்திருக்கிறார். அதாவது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ள பிக்பாஸ் 8 சீசனில் இருந்து கமல் ஹாசன் விலகிய நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது.
அதற்கு சுசித்ரா, பிக்பாஸ் சீசன் 8-ஐ தொகுத்து வழங்கப்போவது விஜய் சேதுபதியா? 8னு சொல்லியும் அந்த பக்கம் அவர் போகலாமா? இந்த சீசனில் கார்த்திக் குமார் கலந்து கொள்ளப்போகிறாரா? அவருக்கு தான் விஜய் சேதிபதியை பிடிக்காதே என்று சுசித்ரா வீடியோவில் பேசியிருப்பது வைரலாகி வருகிறது.