நடிகையை ஏற இறங்கப் பார்த்து பசி எடுக்குதுனு சொன்ன தயாரிப்பாளர்... பொது மேடையில் அரங்கேறிய சம்பவம்.. வைரல் வீடியோ

நடிகையை ஏற இறங்கப் பார்த்து பசி எடுக்குதுனு சொன்ன தயாரிப்பாளர்... பொது மேடையில் அரங்கேறிய சம்பவம்.. வைரல் வீடியோ

அறம் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில், P. ராமலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் சிவம் இயக்கத்தில், புதுமுக நடிகர்களின் நடிப்பில், ஒரு கமர்ஷியல் திரில்லர் ஹாரர் ஜானரில் வெளியான திரைப்படம் "P 2 - இருவர்". இப்படம் ஆகஸ்ட் 9 ம் தேதி வெளியாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படத்தின் ரிலீஸ்க்கு ஒரு வாரத்திற்கு முன்னர் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ராஜனும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த விழாவில் படத்தின் நடிகை சிதுவை ஏற இறங்கப் பார்த்து பசி எடுக்குது எனக் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

அறம் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில், P. ராமலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் சிவம் இயக்கத்தில், புதுமுக நடிகர்களின் நடிப்பில், ஒரு அருமையான கமர்ஷியல் திரில்லர் ஹாரராக உருவாகியுள்ள திரைப்படம் "P 2 - இருவர்". இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மட்டும் இல்லாமல், திரைத்துறையில் முக்கிய இடத்தில் இருப்பவர்களும் கலந்து கொண்டனர். படத்திற்கு தேனிசைத் தென்றல் தேவா இசை அமைத்துள்ளார். சினேகன் பாடல்களை எழுதியுள்ளார்.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில், " ராஜசிம்மன் பேசும்போது ஒட்டுமொத்தமாகத் தயாரிப்பாளர் அனைவரையும் திட்டிவிட்டார். அது தவறு. அவருக்குத் தவறு செய்த தயாரிப்பாளரைக் கண்டிக்கிறேன். தயாரிப்பாளருக்கு எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது. திருட்டு விசிடி பற்றி ஒரு தம்பி சொன்னார். பர்மா பஜாரில் திருட்டு விசிடி பிரச்சனையில் ஐந்து நாள் ஜெயிலுக்கு போனேன் யார் ஆதரவு தந்தார்கள். ஸ்ட்ரைக் வரக்கூடாது தான், ஆனால் இங்கு இருக்கும் பிரச்சனையை யார் சரி செய்வது. தயாரிப்பாளர் லாபம் வந்தால் திரும்பப் படம் தான் எடுப்பான், விஷால் தலைவராக இருந்த போது க்யூப் பிரச்சனையைச் சொல்லி 4 மாசம் ஸ்ட்ரைக் செய்தார், ஒரு பிரயோசனமும் இல்லை. இதில் பாதிக்கப்படுவது ஏழைத்தொழிலாளிகள் தான். நடிகர்கள் தயாரிப்பாளரைப் படாதா பாடு படுத்துகிறார்கள், இதையும் பேச வேண்டும். இப்படத்தில் பாடல், நடனம் எல்லாம் நன்றாக உள்ளது. எல்லா கலைஞர்களும் நன்றாக உழைத்துள்ளனர். படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்" என பேசினார்.

தனது பேச்சுக்கு இடையில், கவிஞர் சினேகனை பாராட்டிப் பேசினார். அப்போது, படத்தின் கதாநாகியை அழைத்து தனது முன் நிற்கவைத்து ஏற இறங்கப் பார்த்தார். அதன் பின்னர் போய் உட்காரச் சொன்னார். உடனே சினேகனைக் குறிப்பிட்டு, " பஞ்சாபி பலகாரம் பார்த்தாலே பசியாறும், எனக்கு இப்போது பசி எடுக்குது தம்பி எனக் கூறினார். அப்போது மேடையில் இருந்த இயக்குநர் பேரரசு உள்ளிட்ட பலர் இவரது பேச்சை கைதட்டி ரசித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

தயாரிப்பாளர் ராஜன் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல், நடிகையை பொது மேடையில் நிற்கவைத்து ஏதோ காட்சிப் பொருளைப் போல ஏற இறங்கப் பார்ப்பது என்ன மாதிரியான செயல் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகையைப் பார்த்து பசி எடுக்கின்றது என கூறியதையும் பலரும் கண்டித்து வருகின்றனர். ஏற்கனவே மலையாள திரையுலகை உலுக்கி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி அளித்த அறிக்கையினால், பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சிக்கியுள்ளனர். இந்நிலையில், தயாரிப்பாளர் ராஜன் இவ்வாறாக நடந்து கொண்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 

LATEST News

Trending News