வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் மஞ்சு வாரியரை மோசமாக பேசிய ரஜினி, இப்படியா பேசுவது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அன்றும் இன்றும் என்றும் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். இவர் படம் வருகிறது என்றாலே திரையரங்கிற்கு திருவிழா தான்.
அதிலும் அனிருத் இசை என்றால் சொல்லவா வேண்டும், அப்படித்தான் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

ஒட்டு மொத்த ரஜினி ரசிகர்களும் செம கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி 50 நிமிடங்களுக்கு மேல் பேசியிருந்தார்.ஒரு நொடி கூட போர் அடிக்காத இந்த பேச்சை பார்க்க ரசிகர்கள் மிக ஆவலுடன் இருக்கின்றனர்.
இதில் ரஜினி என்ன தான் நன்றாக பேசியிருந்தாலும், மஞ்சு வாரியர் குறித்து, அசுரனில் அவ்வளவு வயதானவர் போல் இருந்தார், நேரில் சும்ம தளதள என உள்ளார் என கூறியது தற்போது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.