கருப்பு இருக்கட்டும்.. சூர்யாவின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட் வந்ததால் ரசிகர்கள் குஷி

கருப்பு இருக்கட்டும்.. சூர்யாவின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட் வந்ததால் ரசிகர்கள் குஷி

நடிகர் சூர்யாவின் கடந்த சில படங்கள் சரியாக வசூலை பெறாத காரணத்தால் அவரது ரசிகர்கள் தற்போது அவரது அடுத்த படமான கருப்பு ரிலீசுக்காக தான் காத்திருக்கிறார்கள். வரும் மே 14ஆம் தேதி அந்த படம் திரைக்கு வர இருக்கிறது.

தற்போது தமிழ்நாட்டில் அரசியல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. அதனால் சொன்ன தேதியில் கருப்பு படம் ரிலீஸ் ஆகுமா என்பது இன்னும் குழப்பமாகவே இருந்து வருகிறது. இருப்பினும் சொன்ன தேதியில் படம் வரும் என இயக்குனர் ஆர்ஜே பாலாஜி நேற்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

 

விஸ்வநாதன் அன்ட் சன்ஸ்

கருப்பு படத்தின் ரிலீஸ் ஒரு பக்கம் இருக்க சூர்யாவின் அடுத்த படமான விஸ்வநாதன் அன்ட் சன்ஸ் படத்தின் ரிலீஸ் பற்றிய அப்டேட் வந்திருக்கிறது. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் இந்த படம் வரும் சுதந்திர தின ஸ்பெஷலாக ரிலீசாக இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

வயது அதிகமாக இருக்கும் ஒருவரை இளம் பெண் துரத்தி துரத்தி காதலிப்பது போல தான் இந்த படத்தின் கதை இருக்கிறது என்பது டீசரிலேயே காட்டப்பட்டிருந்தது. சூர்யாவை காதலிக்கும் பெண்ணாக மமிதா பைஜு நடித்திருக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார் ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்திருக்கின்றனர். 

LATEST News

Trending News

HOT GALLERIES