குக் வித் கோமாளி பைனலில் மணிமேகலை பற்றி பேசிய ஒரே நபர்! பிரியங்கா செய்த விஷயம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறியது, அதற்கு பிரியங்கா தான் காரணம் என வெளிவந்த தகவல் பெரும் சர்ச்சையானது.
இதுகுறித்து பல்வேறு தரப்பில் இருந்து பேசப்பட்டு வரும் நிலையில், நேற்று குக் வித் கோமாளி 5 பைனல் பிரமாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தது.
இதில் பிரியங்கா தான் குக் வித் கோமாளி சீசன் 5ன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், பைனல் நிகழ்ச்சியில் மணிமேகலை பற்றி ஒரே ஒரு நபர் மட்டுமே பேசி இருக்கிறார். நடுவராக இருக்கும் செஃப் தாமு தான் அது.
மணிமேகலையை தான் மிஸ் செய்வதாக அவர் கூறினார். அதை கேட்டு பிரியங்கா தலையை மட்டும் ஆட்டி 'ஆம்' என்பது போல ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.