Sound ராக்ட்!! ஜெஃப்ரி ஷாக்ட்!! அந்த கெட்டவார்த்தை பேசி பங்கம் செய்த பிக்பாஸ் 8 செளந்தர்யா...
பிக்பாஸ் சீசன் 8 நடிகர் விஜய் சேதுபதி அவர்களாக சிறப்பாக தொகுத்து வழங்கப்பட்டு ஒளிப்பரப்பாகி வருகிறது. கடந்த வாரம் அர்னவ் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
அதே சமயம் அர்னவ் பிக்பாஸ் வீட்டுக்கு வெளியில் சென்று விஜய் சேதுபதி பக்கத்தில் இருக்கும் போதே போட்டியாளர்களை அசிங்கப்படுத்தி பேசியது சர்ச்சைக்குள்ளானது.
இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்குள் சண்டை ஏற்பட்டு வரும் நிலையில், இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் சென்றுள்ளார். அமரன் படத்தின் பிரமோஷனுக்காக சிவகார்த்திகேயன் சென்றிருக்கிறார்.
இந்நிலையில் பிக்பாஸ் செளந்தர்யா, ஜெஃப்ரியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது கெட்டவார்த்தை பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் செளண்ட் ராக்ட்!! ஜெஃப்ரி ஷாக்ட் என்று கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.