பிக்பாஸ் 9வது சீசனிற்கு புதிய தொகுப்பாளர்... இவர் தானா..
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் ரியாலிட்டி ஷோவாக உள்ளது பிக்பாஸ்.
தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தொடங்கப்பட கடைசியாக இரண்டிலும் 8வது சீசன் முடிவுக்கு வந்துள்ளது.
தற்போது தெலுங்கு சினிமாவின் பிக்பாஸ் 9வது சீசன் குறித்த ஒரு தகவல் தான் வலம் வருகிறது. கடைசியாக தெலுங்கு பிக்பாஸ் 8 சீசனை பிரபல நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி இருந்தார்.
தற்போது புதியதாக தொடங்கவுள்ள 9வது சீசனை இளம் நாயகன் விஜய் தேவரகொண்டா தொகுத்து வழங்க பேச்சு வார்த்தை நடப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.