சன் டிவியில் இருந்து ஜீ தமிழிக்கு தாவிய ஆலியா மானசா!! புது சீரியல் அப்டேட்..
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த சீரியல்களில் ஒன்று ராஜா ராணி. இந்த சீரியலில் ஜோடியாக நடித்து ரியல் ஜோடிகளாக மாறியவர்கள் தான் சஞ்சீவ் - ஆலியா மானசா ஜோடி.
ராஜா ராணி சீரியலில் நடித்து காதலித்து திருமணம் செய்த ஆலியா திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயானார். அதன்பின் இனியா என்ற சீரியலில் பிஸியாக நடித்து வந்தார்.
இந்நிலையில், ஜீ தமிழில் உருவாகும் புது சீரியலில் முக்கிய ரோலில் நடிக்கவும் இருக்கிறார் ஆலியா மானசா. 30 வயதை எட்டியிருக்கும் ஆலியா மானசா தன் குடும்பத்துடன் நேற்று பிரமாண்ட முறையில் கொண்டாடியிருக்கிறார்.
விலையுயர்ந்த காரில் கணவருடன் ரொமான்ஸ் செய்தபடி எடுத்த க்யூட் வீடியோவை பகிர்ந்துள்ளார் ஆலியா மானசா.