ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி குளித்த நீர்துளியில் சோப்பு!! ஒரு சோப்பு எவ்வளவு தெரியுமா
ஹாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சிட்னி ஸ்வீனி. 27 வயதான சிட்னி ஸ்வீனி மேடம் வெப் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான சிட்னி ஸ்வீனி பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகை சிட்னி ஸ்வீனி, 'Sydney's பாத்வாட்டர் பிளிஸ்' என்ற சோப்பு பிராடெக்டை விற்கப்போவதாகவும் அந்த சோப்பு சிட்னி ஸ்வீனி குளித்த தண்ணீரில் இருந்து தயாரிக்கப்படும்.
Dr. Squatch என்ற தயாரிப்பு சோப்பு நிறுவனத்துடன் இதை செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் வரும் ஜூன் 4 ஆம் தேதி முதற்கட்டமாக 5 ஆயிரம் சோப்புகள் விற்பனைக்கு வரவுள்ளதாக சிட்னி ஸ்வீனி தெரிவித்துள்ளார். அதிலும் ஒரு சோப்பின் விலை இந்திய மதிப்பில் ரூ. 685 ஆகுமாம்.