கவர்ச்சி காட்டுவதில் இளம் நடிகைகளை மிஞ்சிய நடிகை சுகன்யா.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் கிளுகிளு நடனம்.. வைரல் வீடியோ..
90களின் முன்னணி நடிகையான சுகன்யா, சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கவர்ச்சியான தோற்றத்தில் தோன்றி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில், இறுக்கமான பேண்ட் அணிந்து, இளம் நடிகைகளை மிஞ்சும் அழகுடன் ஆட்டம் போட்ட அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. சுகன்யா, புது நெல்லு புது நாத்து (1991) படத்தின் மூலம் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர். சின்ன கவுண்டர், மகாநதி, இந்தியன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் புகழ்பெற்றவர்.
பரதநாட்டிய கலைஞரான இவர், சன் டிவியின் ஆனந்தம் தொடரில் நடித்து சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியில், சுகன்யாவின் கவர்ச்சியான உடை மற்றும் நடனம், அவரது வயதையும் தாண்டிய அழகை வெளிப்படுத்தியுள்ளது.
ரசிகர்கள், “இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அழகு” எனப் புகழ்ந்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், சிலர் இந்த உடை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பொருத்தமற்றது என விமர்சித்துள்ளனர்.
இந்த வைரல் புகைப்படங்கள், சுகன்யாவின் தன்னம்பிக்கையையும், காலத்தை கடந்த அவரது ஸ்டைலையும் பறைசாற்றுகின்றன.