ஆசை அடங்காத நடிகை.. முக்கிய புள்ளிகளுக்கு விருந்தாக்கி நாசம் செய்த கட்டை நடிகர்..
தமிழ் சின்னத்திரையில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த பிரபல நடிகை ஒருவர், வெள்ளித்திரைக்கு மாற முயன்று பல சவால்களை எதிர்கொண்டு, இறுதியில் கிளாமர் பாதையை தேர்ந்தெடுத்த கதை இணையத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.
இந்த நடிகை, சீரியல்களில் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். இந்நிலையில், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை அடக்க முடியாமல் திணறி வந்த நடிகைக்கு கட்டை நடிகர் வெள்ளித்திரைக்கு அழைத்து, “உன்னை சினிமாவில் பெரிய நடிகையாக்குகிறேன்” என உறுதியளித்தார். ஆனால், ஆரம்பத்தில் இந்த வாய்ப்பை அவர் தவிர்த்து வந்தார்.
இவரால் வாய்ப்பு பெற்ற மற்றொரு சீரியல் நடிகை சினிமாவில் வெற்றி பெற்றதைப் பார்த்து, இவருக்கும் ஆசை துளிர்விட, அந்த இயக்குநரை நம்பி சீரியல் வாய்ப்புகளை விட்டுவிட்டு சினிமாவை நோக்கி பயணித்தார்.
ஆனால், அந்த இயக்குநர் ஆறு மாதங்களுக்கு மேலாக அவரை அலைக்கழித்து, முக்கிய புள்ளிகள், பெரிய தயாரிப்பாளர்களுக்கு “விருந்தாக்கி”, லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.
வாய்ப்பு கிடைக்காததால் ஏமாற்றமடைந்த நடிகை, மற்றொரு இயக்குநரை சந்தித்தார். ஆனால், அவரோ “அட்ஜெஸ்மென்ட்” செய்ய வேண்டும் எனக் கூறி, நடிகையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். சின்னத்திரை வாய்ப்புகளை இழந்து, சினிமாவிலும் தோல்வியை சந்தித்து, குழப்பத்தில் இருந்த நடிகை, அண்டை மாநிலத்தில் ஒரு பட வாய்ப்பைப் பெற்றார்.
அதைப் பயன்படுத்தி, தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்தார். அவரது முதல் படத்தில் ஓவர் கிளாமராக நடித்து, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால், பலரும் அவரை கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்க அழைத்தனர்.
ஆரம்பத்தில் மறுத்த அவர், பின்னர் வேறு வாய்ப்புகள் கிடைக்காததால், கிளாமர் பாதையை ஏற்றார். தற்போது, இன்ஸ்டாகிராமில் ஹோம்லியான கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இவரது இந்த மாற்றத்தை கேள்விப்பட்டவர்கள், “சின்னத்திரையில் மக்களின் மனதை கவர்ந்த நடிகை, இப்போது எங்கே வந்து நிற்கிறார்” என புலம்பி வருகின்றனர்.
இந்த விவகாரம், சினிமாவில் புதுமுகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தவறான வாக்குறுதிகளால் ஏற்படும் விளைவுகளை வெளிப்படுத்துகிறது.