ஒரே இரவில் 30 முறை.. கெஞ்சி கேட்ட பின் அதை காட்டி.. இயக்குனர் குறித்து ரம்யா கிருஷ்ணன் பகீர்!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் ரம்யா கிருஷ்ணன், 2019-ல் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய இந்தப் படத்தில், ரம்யா கிருஷ்ணன் ‘லீலா’ என்ற சவாலான கதாபாத்திரத்தில் நடித்து, விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றார்.
ஆனால், படப்பிடிப்பில் ஒரு குறிப்பிட்ட காட்சியை எடுக்கும்போது அவருக்கு கடும் சவால் ஏற்பட்டதாக பகிர்ந்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் கூறியதாவது: “சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு காட்சி மிகவும் சவாலானதாக இருந்தது.
வழக்கமான கதாபாத்திரங்கள் போல இல்லாமல், இது மிகவும் சிக்கலானது. ஒரு இரவில், ஒரே காட்சிக்கு 30 முதல் 60 டேக்குகள் வரை எடுக்கப்பட்டன. ஆனால், இயக்குநர் அதை ஓகே செய்யவில்லை. எனக்கு எப்படி நடிக்க வேண்டும் என்றே புரியவில்லை.
இயக்குநரிடம், ‘சார், எப்படி வேண்டும் என்று சொல்லுங்கள், அதற்கேற்ப நடிக்கிறேன்,’ என்று கேட்டேன். அவர் பல விஷயங்களை விளக்கி, முந்தைய டேக்குகளை ஒப்பிட்டு, எந்தப் பகுதி சரியாகவும், எது மாற்றப்பட வேண்டும் என்றும் காட்டினார்.
அதன்பிறகு, அடுத்த நாள் அந்தக் காட்சியை வெற்றிகரமாக முடித்தேன். ஆனால், இந்த அனுபவம் என் சினிமா வாழ்க்கையில் மோசமான ஒன்றாக இருந்தது.”
இந்தப் பேட்டி, ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ரம்யாவின் நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டாலும், இந்த அனுபவம் அவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.