கொரோனா காலத்தில் சூடு பிடித்த கொக்கைன் பிஸ்னஸ்.. புருஷன் பொண்டாட்டியாக சிக்க போகும் பிரபலங்கள்!

கொரோனா காலத்தில் சூடு பிடித்த கொக்கைன் பிஸ்னஸ்.. புருஷன் பொண்டாட்டியாக சிக்க போகும் பிரபலங்கள்!

தமிழ் சினிமா உலகம் கொக்கைன் விவகாரத்தால் பெரும் பரபரப்பில் உள்ளது. இதுவரை இரண்டு பிரபல நடிகர்கள், ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, சென்னை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நுங்கம்பாக்கம் காவல்துறை, மே 2025-ல் ஒரு பப் சண்டையை அடுத்து, முன்னாள் AIADMK நிர்வாகி பிரசாத் மற்றும் கானா நாட்டவர் ஜான் உள்ளிட்டோரை கைது செய்து, 11 கிராம் கொக்கைன் பறிமுதல் செய்தது. இவர்களது வாக்குமூலத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவின் பெயர்கள் அடிபட்டன.

கொக்கைன் கலாச்சாரம்: முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் கலந்துகொள்ளும் பிரத்தியேக பார்ட்டிகளில் கொக்கைன் பயன்பாடு பரவலாக உள்ளதாகக் கூறப்படுகிறது. 

கொரோனா காலத்தில், துபாயைச் சேர்ந்த ஒரு நடிகரின் துணையுடன், கணவன்-மனைவியான பிரபலங்கள் இந்தப் பிசினஸை நடத்தியதாகவும், மற்றொரு நடிகை தரமான கொக்கைனை விநியோகித்ததாகவும் பேச்சு அடிபடுகிறது.

பாடகி சுசித்ரா, 2024-ல் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழாவில் கொக்கைன் பயன்பாடு இருந்ததாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

காவல்துறை விசாரணை: வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் உரையாடல்களில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பெயர்கள் கிடைத்துள்ளன. 

கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் மற்றும் பிரசாத் மூலம் ஸ்ரீகாந்த் 40 முறை கொக்கைன் வாங்கியதாகவும் (ரூ.4.72 லட்சம்), கிருஷ்ணா பார்ட்டிகளில் பங்கேற்றதாகவும் தகவல்கள் உள்ளன. 

காவல்துறை தீவிர விசாரணையில், மேலும் பலர் சிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

2026 தேர்தல் தாக்கம்: இந்த விவகாரம் 2026 சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. 

DMK-வின் முன்னாள் NRI பிரிவு நிர்வாகி ஜாஃபர் சாதிக் உள்ளிட்டோரின் கைது (ரூ.2000 கோடி போதைப்பொருள் வழக்கு) இதற்கு மேலும் வலு சேர்க்கிறது. சுசித்ராவின் ஆதாரங்கள் கிடைத்தால், மேலும் பலர் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News